நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Admitted in Hospital : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருந்த மாநாடு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது கொரானா இல்லை என தகவல் கிடைத்துள்ளது.

L

தற்போது சிம்புவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.