Simbu Act In Virat Kohli BIOPIC?? Str Fans Happy

YouTube video

Ratchasa Raveena About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ், சைக்கிளிங், சிறிய வகை ட்ரோன் வடிவமைப்பு என எக்கச்சக்கமான திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர்.

இவரது நடிப்பில் இறுதியாக மணி அண்ணன் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ரிலீசுக்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ராட்சசன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா பேட்டி ஒன்றில் தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசை என்று பேசியுள்ளார். படங்களில் நடித்து வந்த ரவீனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரவீனா தாஹா அளித்த இந்த பேட்டி அஜித் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

அதேசமயம் தல அஜித் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அஜித்திற்கு வாழ்த்துக்களை கூறி ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.