வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை உதயநிதி கைப்பற்ற சிம்பு என்ன சொல்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.

இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து நடிகர் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களது இணைவது மகிழ்ச்சி அண்ணா என பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.