அஜித்தா விஜய்யா உங்களுக்கு யார் வில்லனாக நடிக்கலாம் என்ற கேள்விக்கு நடிகர் சிம்பு ஓபன் ஆக பதிலளித்துள்ளார்.

Simbu About Thala Thalapathy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக பத்து தலை மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டி வீடியோவில் சொன்ன தகவல் திடீர் என வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

அஜித்தா விஜய்யா? உங்களுக்கு யார் வில்லனாக நடிக்கணும் - ஓபன் ஆக பதிலளித்த சிம்பு

அந்தப் பேட்டியில் உங்களுக்கு உங்களுடைய படத்தில் அஜித் விஜய் ரஜினி கமல் இவர்களில் யார் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை? இவர்களில் யாரை உங்களுக்கு வில்லனாக தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

கிரிக்கெட் சர்க்கார் :தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

அஜித்தா விஜய்யா? உங்களுக்கு யார் வில்லனாக நடிக்கணும் - ஓபன் ஆக பதிலளித்த சிம்பு

அதற்கு பதிலளித்த சிம்பு 4 பேருமே என்னை விட அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் என்னுடைய படத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது நான் அவர்களுடைய படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் ஓகே என சொல்லி விடுவேன் என தெரிவித்துள்ளார்.