சிம்புவின் மஃப்டி பட ரீமேக் படமும் கைவிடப்பட்டதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Simbu 45 Movie Details : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் சிம்பு.

இவரது நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது.

இந்த படம் மட்டுமில்லாமல் சிம்பு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் மஃப்டி படத்தின் ரீமேக் படத்திலும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வந்தார்.

பொன்னியின் செல்வனுக்காக மணிரத்தினம் போட்ட கண்டிஷன்.. படத்தை விட்டு விலகும் நடிகர்கள்?

திடீரென மாநாடு படத்தை தொடர்ந்து இந்த படமும் கைவிடப்பட்டதாக தகவல் ஒன்று பரவி சிம்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மஃப்டி ரீமேக் திரைப்படம் கைவிடப்படவில்லை, சரியாக தான் சென்று கொண்டிருக்கிறது. யாரோ இது போல் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.