Silk Smitha Tamil Biopic Movie

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Silk Smitha Tamil Biopic Movie : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் கவர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. இவரை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க வாய்ப்பில்லை என்று தான் கூற வேண்டும்.

வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல் நாயகியாக சில படங்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.

ஆனாலும் இவர் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.

இந்தியில் இவருடைய வாழ்க்கை வரலாறு தி டர்டி ஸ்டோரி என்ற பெயரில் படமாக உருவானது. இந்த படத்தில் வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து இருந்தார்.

தற்போது இந்தப் படம் தமிழிலும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு அவள் அப்படித்தான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில்க் ஸ்மிதாவாக நடிக்க தெலுங்கு நடிகை அனுசயா பரத்வாஜ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.