ஜனவரி இருபத்தி எட்டாம் தேதி வெளியாக உள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal Sneakpeek Video : தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரேயா, நாசர், மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, கேஎஸ் ரவிக்குமார், பானுப்ரியா, இளவரசு என பல திரையுலக பிரபலங்கள் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

இணையத்தை கலக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ

விஷால் வெங்கட் இயக்கத்தில் ரதன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. மெய்யேந்திரன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்துள்ளார். அஜ்மல் கான் மற்றும் ரேயா ஆகியோர் இந்த படத்தை ஏஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் இந்த வாரம் வெளியீடாக வரும் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sila Nerangalil Sila Manidhargal - Sneak Peek | Ashok Selvan | Radhan | Vishal Venkat @Infinix India