பல பிரபலங்களில் கூட்டணியில் இந்த வாரம் திரையரங்கை கலக்க வருகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படம்.

Sila Nerangalil Sila Manithargal Release Date : தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரேயா, நாசர், மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, கேஎஸ் ரவிக்குமார், பானுப்ரியா, இளவரசு என பல திரையுலக பிரபலங்கள் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

விஷால் வெங்கட் இயக்கத்தில் ரதன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. மெய்யேந்திரன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்துள்ளார். அஜ்மல் கான் மற்றும் ரேயா ஆகியோர் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் இந்த வாரம் வெளியீடாக வரும் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்களைக் கவரும் படமாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.