Sidharth Venugopal Latest Photo

நான், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

Sidharth Venugopal Latest Photo : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் சிறப்பான இடம் அமைந்துவிடுவதில்லை. பல நடிகர்கள் ஓரிரு படங்களோடு இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான ஜூன்7 என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி நான், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் சித்தார்த் வேணுகோபால்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் இவரும் ஒருவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.