Sidharth Tweet Corona Vaccine

கொரானா தடுப்பூசி எங்க டா டேய் என பதிவிட்டு மத்திய அரசை விளாசியுள்ளார் பிரபல நடிகர்.

Sidharth Tweet Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உருமாறி இரண்டாவது அலையாக இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது தகுந்த நடவடிக்கைகளால் ஒரு அளவிற்கு கொரானா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாததால் முதலாளியை விட இரண்டாவது அறையைத் படு மோசமான விளைவை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்கள் பிணைப்பும் எஙகள் கொத்துக்கொத்தாக எரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உச்சத்தை அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன் பெட் பற்றாக்குறையாலும் பலர் இன்னலுக்கு ஆளாகி உயிரை விடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

இவைகளுக்கு இடையே கொரானா தடுப்பூசி பற்றாக்குறை வேறு மக்களை அச்சத்தில் உள்ளாக்கி வருகிறது. ‌‌ மத்திய அரசு தமிழகத்திற்கு மிகக்குறைந்த அளவிலான கொரானா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது. இதனால் தடுப்பூசி களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் மந்தமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரானா தடுப்பூசி எங்க டா டேய் என பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் ஆதரவுகளையும் பெற்று வருகிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.