Sidharth Reply to Ajith Fan

டேய் அஜித் சாரின் கூப்பிடு என எச்சரித்த ரசிகருக்கு தமிழ் ஹீரோ பதிலடி கொடுத்துள்ளார்.

Sidharth Reply to Ajith Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமாவில் அதிகமான தோல்விகளை கொடுத்த நடிகராக இருந்தாலும் ரசிகர்களின பக்க பலத்தால் இன்று வரை முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போதெல்லாம் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக தெலுங்கு பட நாயகனான கார்த்திகேயா நடித்து வருகிறார்.

டேய் அஜித் சார்னு கூப்பிடு.. எச்சரித்த ரசிகருக்கு பிரபல தமிழ் ஹீரோ கொடுத்த நோஸ்கட் பதில்.!!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாள் தினத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் அஜித். இவருடைய ரசிகர்கள் சமூக வலைதள பட்டியலில் இப்போது அஜித்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருவார்கள். அவருக்காக மற்ற நடிகர்களிடம் எல்லாம் சண்டை போடுவது என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு முன்பு அப்படித்தான் ஒரு சுவாரசியமான சண்டை நடைபெற்று உள்ளது. நடிகர் சித்தார்த் அஜித் எனக்கூறி பதிவிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் டேய் முதலில் அவருக்கு மரியாதை கொடு. அஜித் சார் என கூப்பிடு என எச்சரிக்க அதற்கு சித்தார்த் கூலாக வடிவேலுவின் டயலாக் ஆஹான் என பதிவிட்டு அந்த ரசிகருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு தற்போது திடீரென சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.
Attachments area