Siddharth Thalaivar 168
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து தலைவர் 168 படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி தற்போது தலைவர் 168 படத்திலும் கமல் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ரஜினியின் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு தங்கையாக நடிக்கிறார், இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

ஏற்கனவே குஷ்பூ, மீனா, சூரி என பல நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில் தற்போது சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் ( கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக ) நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sidharth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.