வலிமை படத்தில் அம்மா பாடல் பாடியது பற்றி பாடகர் சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Sid Sriram About Valimai Mother Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நாங்க வேற மாதிரி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அம்மா பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது ‌‌‌.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். பாடலினை விக்னேஷ் சிவன் எழுதினார். தற்போது இது குறித்து சித் ஸ்ரீராம் அவர்கள் பேசியுள்ளார். சாதனையாளர் அஜித்தின் வலிமை பாடல் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் சகோதரர் விக்னேஷ் சிவனின் அருமையான வரிகளில் பாடியது உற்சாகம் அளிக்கிறது. இந்தப் பாடலை அனைத்து தாய்மார்களுக்கும் காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தான் என்னுடைய inspiration – Actor Ashwin Full Speech | #EnnaSollaPogiraiAudioLaunch