பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் ஹீரோ சிப்பு சூரியன் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் சீசன் நேற்று முடிவடைந்தது தொடர்ந்து நாளை முதல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த இரண்டாவது சீசனில் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடர்ந்து நடிக்க நாயகன் பாரதியாக ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூரியன் நடிக்கிறார்.

இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது சிப்பு சூரியன் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக வெளியான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.