விஜய் டிவிக்கு வந்ததும் ரோஜா சீரியல் கழுவி கழுவி ஊற்றியுள்ளார் சிப்பு சூரியன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சிப்பு சூரியன். இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே வெள்ளித்தறையில் கவனம் செலுத்த போவதாக ரோஜா சீரியல் இருந்து விலகிய இவர் மீண்டும் அந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். இதுபோல் இரண்டு முறை விளக்கு போவதாக அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் அதே சீரியலில் நடித்தார்.

தற்போது சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய நிலையில் ரோஜா சீரியல் பற்றி கழுவி ஊற்றியுள்ளார். அதாவது ஒரு சீரியலில் இரண்டு ஆண்டு அல்லது மூன்றாண்டு நடிக்கலாம். ஐந்தாண்டுக்கு அதே கடத்தல் அதே சவால் என நடிப்பது கடினமான விஷயம்.

இப்போது நினைத்தாலும் அரைத்த மாவை அரைத்தது போல தான் தோன்றுகிறது. அதனால் தான் இரண்டு முறை சீரியலில் இருந்து விலகுவதாக பதிவு செய்தேன் ஆனால் என்னை பலர் சமாதானம் செய்து மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள்.

ரோஜா சீரியலுக்கு பிறகு வெள்ளி திரையில் கவனம் செலுத்த தான் முடிவெடுத்தேன். ஆனால் பிரவீன் சொன்ன பாரதி கண்ணம்மா 2 கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. அவர் புதுமையாக செய்வார் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.