SIAA Election Video : Vishal, Vijayakanth, Kollywood, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Nasser, Cinema News

விஷால் வெளியிட்ட வீடியோவை மசாலா படம் எனவும் இது நியாயமே இல்லை எனவும் விஜய்காந்த் ரசிகர்கள் விளாசி வருக்கின்றனர்.

SIAA Election Video :

சினிமா நட்சத்திரங்களுடன் நாடக கலைஞர்களையும் உறுப்பினர்களாக கொண்டுள்ள ஒரே சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் தான்.

தற்போது இந்த சங்கத்தை நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஆண்டு வந்தது. மேலும் புதிய தலைமைக்கான தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது.

பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அரசியல் களத்தை போலவே இந்த தேர்தலுக்கான பிரச்சாரமும் திரையுலகில் பரபரப்பாகியுள்ளது.

படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கேட்ட பத்திரிகையாளர்கள், ஆடைகளை கழற்றி அரைகுறையாக நின்ற பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்நிலையில் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆட்டம், மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து இருப்பதால் ஒரு மசாலா படம் போலவே காட்சியளிப்பதாக கூறுகின்றனர்.

நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது பற்றி சொல்லும் இந்த வீடியோவில் நடிகர் சங்க வளர்ச்சிக்கு அரும்பாடு பட்ட கேப்டன் விஜயகாந்த் பற்றி ஒரிடத்த்தில் கூட பேசாதது விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எதிரணியினர் விஜய்காந்தை சந்தித்து ஆசி பெற்றதாலும் கேப்டன் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதாலும் அவரை பற்றி பேசவில்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.