SIAA Election 2019 | Actor Karthi | Prashanth | Vishal | Tamil Cinema Latest News | Tamil Cinema News | Kollywood Cinema | Tamil News
SIAA Election 2019

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் கார்த்தியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு முன்னணி நடிகர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SIAA Election 2019 : தமிழ் சினிமாவிற்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக நாசர் தலைவர் பதிவிற்கு போட்டியிட அவருக்கு எதிராக பாக்கியராஜ் போட்டி போடுகிறார்.

பிக் பாஸ் 3-ல் நுழையும் 90’s முன்னணி நடிகர் – களைகட்ட போகும் பிக் பாஸ்.!

மேலும் விஷால் பொது செயலாளர் பதிவிற்கு போட்டியிட அவருக்கு எதிராக ஐசரி கணேஷ் போட்டி போடுகிறார். அதே போல் நடிகர் கார்த்தி பொருளாளர் பதிவிற்கு போட்டியிடுகிறார்.

கார்த்திக்கு எதிராக 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த டாப் ஸ்டார் பிரசாந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரங்களிலும் அதிகமாகியுள்ளது.

SIAA Election 2019
SIAA Election 2019