Shubman Gill reveals Rahul Dravid advice
Shubman Gill reveals Rahul Dravid advice

Shubman Gill reveals Rahul Dravid advice – சுப்மன் கில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமைகளில் ஒருவர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன மந்திரத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலைமைக்கு கொண்டு வந்த “அடிப்படை விளையாட்டை” எப்போதும் விடக் கூடாது என்பது தான் அந்த மந்திரம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், அண்டர்-19 போட்டிகளிலிருந்தே கில்லை வழிநடத்தி வருகிறார்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து, சாய்னா, கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் ஏ சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ-க்காக பஞ்சாப் பேட்ஸ்மேன் கில் சிறந்த விரராக இருந்தார்.

20வது பிறந்தநாளைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதே மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக கில் அதிக ரன்கள் குவித்தார். மூன்று அரைசதங்கள் உட்பட 218 ரன்கள் குவித்தார்.

டிராவிட் குறித்து பேசிய சுப்மன் கில், “ராகுல் சார் எனக்கு அண்டர் 19 நாட்களிலிருந்தே பயிற்சியளித்து வருகிறார். பின்னஎ இந்திய ஏ அணியிலும் பயிற்சியளிக்கிறார்.

மேக்கப் மீது ஈர்ப்பு.. அதனால் படுத்து உறங்குவதே இவருடன் தான் – தமன்னா ஓபன் டாக்.!

அவர் சொன்ன அடிப்படை ஆலோசனை உள்ளது, அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.

உனக்கு வெற்றி பெற்று கொடுத்த அடிப்படை விளையாட்டை எப்போதும் விட கூடாது என்று அவர் கூறியிருந்தார்.”

“என்னுடைய விளையாட்டை நான் மாற்றினால், அது உண்மையானதாக இருக்காது என்றும், வெற்றி பெற்று தராது என்று ராகுல் சார் கூறுவார்.

சிறந்தவர்கள் முன்வைக்கும் சவாலை நாம் எதிர்கொள்ளும் போது அவரது கவனம் எப்போதும் மன அலங்காரம் மீதுதான் இருக்கும்,” என்றார் கில்.