Shrutihaasan Clarification on Vikram Movie

விக்ரம் படத்தில் நடிக்கவில்லை ஆனால் அக்ஷராஹாசன் இயக்கத்தில் நடிக்க ஆசை இருப்பதாக ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Shrutihaasan Clarification on Vikram Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விக்ரம் படத்தில் நடிப்பதற்கு அழைப்பு எனக்கு வரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தங்கை அக்ஷரா ஹாஸனுக்கு படத்தை இயக்க வேண்டும் என ஆசை. அவரது இயக்கத்தில் நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். தங்கையின் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது என ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியின் மூலம் விக்ரம் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.