அப்பா அம்மா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது எனக்கு மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார் சுருதி ஹாசன்.

ShrutiHaasan About Parents Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கமலும் சரிகாவும் கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களது விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து எனக்கு மகிழ்ச்சிதான். அப்பாவும் அம்மாவும் தனித்தனியாக என்னுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதில் கிடைக்காத மகிழ்ச்சி தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் போது கிடைத்துள்ளது.

இதனால் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதை எண்ணி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.