ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

ShrutiHaasan About Her Marriage : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ருதி ஹாசனுக்கு திருமணம் முடிந்ததா? தீயாக பரவும் வீடியோ

இந்த நிலையில் இவருக்கும் இவருடைய காதலருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தீயாக தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் பலரும் நேரடியாக ஸ்ருதி ஹாசனிடம் இது குறித்து கேட்டனர்.

அதற்கு ஸ்ருதிஹாசன் இல்லை எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என பதிலளித்துள்ளார். இவர் திருமணம் குறித்து பேசியுள்ளார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.