தொகுப்பாளர் ரியோவின் மனைவிக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தும் பிரபலமானவர் ரியோ ராஜ்.
மேலும் இவர் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
இவருடைய மனைவி ஸ்ருதி ராஜ் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறாராம். இவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அப்பாவாக போகும் ரியோவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.