Shruti Hassan Singing Video memes
Shruti Hassan Singing Video memes

ஸ்ருதிஹாசன் பாடிய பாட்டைக் கேட்டு நெட்டிசன்கள் அலறி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

Shruti Hassan Singing Video memes : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும் கூட.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் இவர் சமையல், பூனையுடன் விளையாட்டு, பாட்டு பாடுதல் என தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார்.

அன்னைக்கு ‌அப்பா பாட்டு இன்னைக்கு இந்த பாட்டா? ஸ்ருதிஹாசனின் திறமையை பார்த்து வியக்கும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு சில பாடல்களை இவர் ஸ்டைலில் பாடினார். அதில் ஒரு பாடல் தான் தென்பாண்டி சீமையிலே எனும் இளையராஜா பாடிய பாடல்.

மிகவும் வித்தியாசமான ஸ்டைலில் ஸ்ருதிஹாசன் இந்த பாடலை பாடியிருந்தார். இளையராஜாவின் குரலில் இப்பாடலைக் கேட்டுவிட்டு ஸ்ருதிஹாசன் பாடிய விதத்தை பார்க்கும் போது நெட்டிசன்கள் ஐயோ அம்மா என்று அலறி அடித்து ஓடுகின்றனர்.

இதனை வைத்து பல மீம்ஸ்கள் றெக்க கட்டி பறக்கின்றன. அதில் ஒரு வீடியோ இதோ உங்களுக்காக