Shruti Haasan Salary for Vakeel Saab
Shruti Haasan Salary for Vakeel Saab

வெறும் பத்து நாள் கால் ஷீட் தான் இருப்பினும் தெலுங்கு படம் ஒன்றிற்கு அதிகமாக சம்பளம் கேட்ட இருந்தார் ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan Salary for Vakeel Saab : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கிறார்.

நடிப்பது மட்டுமல்லாமல் பாடுவது, ஆடுவது என பல்வேறு திறமைகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார். இடையில் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. வக்கீல் சபாப் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழு ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளது.

குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஆல்யா மானசா.. இப்போவே எப்படி போஸ் கொடுத்திருக்கு பாருங்க!

மேலும் ஸ்ருதி ஹாசனின் 10 நாள் கால்சீட் தான் படக்குழுவிற்கு தேவைப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூபாய் 7 லட்சம் என பத்து நாளைக்கு ரூபாய் 70 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.