Shruti Haasan Request to Fans
Shruti Haasan Request to Fans

இனி என்ன போதி தர்மரை அழைச்சிட்டு வா என்று சொல்லாதீங்க என பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

Shruti Haasan Request to Fans : உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவ தொடங்கியதும் மீம்ஸ் கிரியேட்டர்களின் பார்வை ஸ்ருதிஹாசன் மீது திரும்பியது.

பலரும் அவரை போதிதர்மரை அழைத்து வருமாறு கிண்டலடித்து வந்தனர். இதனை அவரே கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

கொரானா எதிரொலி.. கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா? – வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு.!

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஜாலியாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் இனி போதி தர்மரை அழைச்சிட்டு வா என்று சொல்லாதீங்க என கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் காட்சிகள் ஏழாம் அறிவு படத்தில் காட்டப்பட்டது போலவே நடைபெற்று வருவதால் தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஸ்ருதிஹாசனை வைத்து இப்படி கிண்டல் அடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan Request to Fans
Shruti Haasan Request to Fans