shruthi
குடிப்பழக்கத்திற்கு தான் அடிமையாக இருந்ததாகவும், அதிலிருந்து பின் மீண்டதாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Shruti haasan overcome whisky addiction – கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் 3, ஏழாம் அறிவு, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. மேலும், அவரின் காதல் முறிந்து விட்டதாக மட்டும் செய்திகள் வெளியானது.

பிக் பாஸ் இறுதி போட்டிக்கு வராதது ஏன்? – சரவணன் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் தனது பல சொந்த விபரங்களை பகிர்ந்துள்ளார். அப்போது ‘ எனக்கு விஸ்கி குடிக்கும் பழக்கம் இருந்தது. அதை மிகவும் விரும்பி அருந்தி வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். இது என் வாழ்க்கையில் புதிய மாற்றம். உண்மையில் நான் நன்றாக இல்லை இதை யாரிடமும் கூறவில்லை. அது என் சொந்த விஷயம் எனவும் இதை என் நண்பர்களிடம் கூற தேவையில்லை என நினைத்தேன். நான் மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன்’ என அவர் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு ஒரே மாதிரி வேடங்கள் வருவதால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ‘லாபம்’ என்கிற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.