மீண்டும் விஜய் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். ஆனால் விஜயுடன் இல்லை விஜயின் ரிமேக் படத்தில் தான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த படம் புலி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
ஸ்ருதியும் விஜயும் சேர்ந்து நடித்திருந்த முதல் படமும் இது தான், கடைசி படமும் இது தான். அதன் பின்னர் இந்த ஜோடி சேரவே இல்லை.
இந்நிலையில் இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.