Shruti Haasan Crazy Photo shoot Photos
Shruti Haasan Crazy Photo shoot Photos

விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan Crazy Photo shoot Photos : தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகனே மூத்த மகளான இவர் தன் அப்பாவைப் போலவே பன்முகத்திறமை கொண்டவர்.

நடிப்பு பாட்டு நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். ஆனால் என்ன தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியிலும் நடித்துவருகிறார். தயாரிப்பாளராகும் சில படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.

வாய் பேச முடியாதவர்களுக்கு லாரன்ஸ் செய்த உதவி.. பதிலுக்கு சைகையில் நன்றி சொல்லும் பெண்மணி – மனதை உருக வைக்கும் வீடியோ.!

தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளார்.

வீட்டில் இருக்கும் வித்தியாசம் போர் அடிப்பதால் சமைப்பது நாயை பூனையுடன் விளையாடுவது லைவ் சாட்டிங் பாடல்களைப் பாடுவது கீபோர்டு வாசிப்பது என தன்னுடைய நேரத்தை கழித்து வருகிறார்.

இப்படியான நிலையில் வீட்டில் இருப்பது போரடிக்கிறது என விதவிதமாக கண்டபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

சில ரசிகர்கள் இதனைப் பார்க்க காமெடியாக இருப்பதாகவும் சிலர் சூப்பராக இருப்பதாகவும் கூறிவருகின்றனர். அதேசமயம் இதனால் கடுப்பானவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.