Shruti Haasan back to Tollywood : Kollywood | Tamil CInema | , Cinema News , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Shruti Haasan back to Tollywood :

தற்போது தெலுங்கிலும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தளபதி 63 – முதல்முறையாக புகைப்படம் வெளியிட்ட அட்லி; வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இவர் சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மொழிப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் இவர் நடித்து வருகிறார் இதுபோக தற்போது தெலுங்கிலும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவருடன் தான் ஸ்ருதிஹாசன் மீண்டும் கம்பேக் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.