Shruti Haasan
Shruti Haasan

Shruti Haasan :  உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

கௌதம் மேனனை பங்கமாய் கலாய்த்த பார்த்திபன் – என்ன சொன்னார்னு நீங்களே பாருங்க!

இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் நடிகை தமன்னா மட்டும் ஆணாக பிறந்திருந்தால் நான் அவரையே திருமணம் செய்திருப்பேன் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஸ்ருதி ஹாசனின் காதலர் மைக்கல் கூட சங்கடப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை தமன்னா தற்போது மறுத்துள்ளார்.

“ஸ்ருதி ஹாசன் அப்படி பேசியது முழுக்க முழுக்க காமெடிக்காக மட்டுமே. அதை பெரிதுப்படுத்த வேண்டாம்.

அதேபோல் இதுகுறித்து மைக்கல் கேட்டதும் விளையாட்டாகதான். மற்றபடி எதுவும் பிரச்னையில்லை” என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.