Shruti Haasan About TN Election Results

கடும் போட்டிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் அது குறித்து ஸ்ருதிஹசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Shruti Haasan About TN Election Results : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த சட்டமன்ற தேர்தலில் உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி 234 தொகுதியிலும் போட்டியிட்டது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து வந்த கமல் ஹாசன் பிறகு பின்னடைவை சந்திக்க தொடங்கினார்.

கடும் போட்டிக்கு பிறகு தோல்வியை தழுவிய கமல் - ஸ்ருதிஹாசன் என்ன சொல்கிறார் பாருங்கள்.!!

அவரும் பிஜேபி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி கண்டார். கடும் போராட்டத்திற்கு பிறகு கமல் தோல்வியை தழுவியது மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமலஹாசனின் தோல்வி குறித்து ஸ்ருதிஹாசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அப்பாவை நினைத்து எப்போதும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே மக்கள் நீதி மையம் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதை குறித்து தான் ஸ்ருதிஹாசன் இவ்வாறு கூறி இருப்பார் என மக்கள் நீதி மைய தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.