shruthihaasan preethi role in coolie movie
shruthihaasan preethi role in coolie movie

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தை பட குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், மகேந்திரன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் படக்குழு ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு ஸ்ருதிஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இதில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி லோகேஷ் என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.