Shruthi Raj Video About Azhagu Serial Dropped
Shruthi Raj Video About Azhagu Serial Dropped

அழகு சீரியல் என்னாச்சு என ஸ்ருதிராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shruthi Raj Video About Azhagu Serial Dropped : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் அழகு. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் தற்போது திடீரென முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது ஸ்ருதி ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எனக்கும் என்ன நடந்தது என தெரியவில்லை. லாக் டவுன் ஆரம்பித்த பிறகு சில நாட்கள் கழித்து சூட்டிங்கிற்கு அழைத்தார்கள். எனக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் என்னால் வர முடியாது என மறுத்து விட்டேன்.

பக்கா வெறித்தனம்.. இதை விட வேறென்ன வேணும்?? தெறிக்கவிடும் விஜய் ஃபேன்ஸ் – சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தரமான வீடியோ, உருவாக்கியது யார் தெரியுமா!

அதன் பின்னர் மீண்டும் சீரியல் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தார். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் திடீரென என்ன நடந்தது என தெரியவில்லை. சீரியலை ட்ராப் செய்து விட்டார்கள் எனக் கூறியுள்ளார். எனக்கும் இந்த சீரியலில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

எனக்காக ஃபேன்ஸ் கிளப் எல்லாம் உருவாக்கி ஆதரவு தந்தீர்கள் அது ஆதரவு நான் நடிக்கும் மற்ற சீரியல்களுக்கும் கொடுப்பீர்கள் என மூன்றாவதாக அந்த வீடியோவில் கூறியுள்ளாராம்.

https://www.instagram.com/tv/CCbJnBhhDcL/?igshid=1cc82f1s8j6u7