Shruthi Haasan

Shruthi Haasan : புலி, வேதாளம் என விஜய், அஜித்துடன் இணைந்து நடித்திருந்தாலும் தனக்கு பிடித்த படம் இது தான் என ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து விட்டார் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்.

தற்போது படங்களில் பெரியதாக ஆர்வம் காட்டாமல் பாடுவது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, படத்தை தயாரிப்பது என தன்னுடைய கவனத்தை திசை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ஹெலோ சகோ என்ற நிகழ்ச்சியில் அக்ஷரா ஹாசனும் ஆர்.ஜே பாலாஜியும் கலந்து கொண்டனர்.

அப்போது ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது? என கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு ஸ்ருதி ஹாசன் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்திருந்த ஸ்ரீமந்துடு தான் என கூறியுள்ளார்.