தனுஷின் தீவிர ரசிகையாக மாறி விட்டதாக சூர்யாவின் ரீல் மகள் தெரிவித்துள்ளார்.

Shriya Sharma About Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்தப் படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார் குட்டி பாப்பா ஸ்ரேயா சர்மா.

தனுஷின் தீவிர ரசிகையாக மாறிய சூர்யாவின் ரீல் மகள் - அவரே அளித்த பேட்டி.!!

தற்போது பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்கள் சிலவற்றில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தற்போது நடிகர் தனுஷின் நடிப்பிற்கு ரசிகை ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார். இவர் அளித்த பேட்டி வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.