
பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போல இசைய கேட்ட சம்பளத்தால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்து அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய், ரஜினி விக்ரம், சிம்பு, விஷால் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரேயா தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். RRR படத்தில் நடித்திருந்த இவர் அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட படக்குழு ஸ்ரேயாவை அணுகி உள்ளது.

அவர் இந்த பாடலுக்கு நடனமாட ரூபாய் ஒரு கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.