YouTube video

Shraddha Srinath About 1year of NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

அமிதாபச்சன், டாப்சி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் ஷர்த்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் வட நாட்டு நடிகையான ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒரு வருடத்தை நிறைவு செய்த நேர்கொண்ட பார்வை.. அஜித்தை பற்றி ஷர்த்தா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவு – இப்போ என்ன சொல்றார் பாருங்க!

தற்போது இப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இப் படத்தில் நடித்திருந்த ஷர்த்தா ஸ்ரீநாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தல அஜித்துடன் இணைந்து நடித்தது தனக்கு மிகவும் கௌரவமாக உள்ளது. பலர் பேசத் தயங்கும் விஷயங்களை இப்படம் தெளிவாக பேசியது. அஜித்தும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த படத்தில் நடித்திருந்தார் என கூறியுள்ளார்.

மேலும் அவர் திரையரங்கில் தல அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த புகைப்படம் ஒன்றையும் படத்தில் இடம்பெறும் காட்சி புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.