தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மீண்டும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் வரலாற்று பாணியில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் பெரிய அளவில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தென்காசி அருகே உள்ள காட்டு பகுதியில் நடைபெற்று வந்த இப்படத்தின் போர் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு படக்குழுவினர் உடனடியாக அந்த காட்சிகளை நீக்கி உள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.