மாமன்னன் திரைப்படத்தின் சண்டைக் காட்சி இணையத்தில் லீக் ஆனது.

கோலிவுட் திரை உலகில் பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். அந்த படப்பிடிப்பு காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.