Shocking Update on Valimai Shooting
Shocking Update on Valimai Shooting

வலிமை படத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஷூட்டிங்கிற்கு வராததால் படக்குழு அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Shocking Update on Valimai Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் மற்றும் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கி உள்ளனர். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அஜித்தும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் மற்ற சில நடிகர், நடிகைகள் கொரானா வைரஸ் பயத்தின் காரணமாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு என்ன செய்வது என தெரியாமல் அதிருப்தியில் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனையில் தல அஜித் தலையிட்டு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்புகளை விரைவாக முடித்து விட்டு 2021 சம்மரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.