நடிகர் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கைவிடப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Shocking Update on Suriya and Bala Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி கொண்டதை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

கைவிடப்படுகிறதா சூர்யா, பாலாவின் திரைப்படம்?? வெளியான அதிர்ச்சித் தகவல் - காரணம் என்ன??

இப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில் சூர்யா பாலா இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இது உண்மை இல்லை என்பது போல படக்குழு தெரிவித்திருந்தது.

கைவிடப்படுகிறதா சூர்யா, பாலாவின் திரைப்படம்?? வெளியான அதிர்ச்சித் தகவல் - காரணம் என்ன??

அப்படி இருந்தும் தற்போது இந்த இந்த படத்தை முழுமையாக கைவிடப்பட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை படக்குழு அறிவித்தால் தான் தெரியும்.