Shocking Update on Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியலிருந்து கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரன் விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது.

Shocking Update on Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்பத்தை பற்றி பேசும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் குமரன். கடந்த சில தினங்களாக இவரை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பார்க்க முடியவில்லை. கதிர் படம் ஒன்றில் நடிப்பதற்காக வெளியில் சென்று இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதன் காரணமாக அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அஸ்வின் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இதுகுறித்து சீரியல் குழுவினரிடம் விசாரிக்கையில் இது முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது. கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரன் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.