Vijay Tv Tweet About BB4
Vijay Tv Tweet About BB4

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் தேதி அறிவிக்கப்படாததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Shocking Update about Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக 4வது சீசன் தொடங்க உள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோக்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கடந்த செப்டெம்பர் 19ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வச்சு செய்த வனிதா.. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு – என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.!!

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டியாளர்கள் இருவருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டுள்ளனர்.

இதன் காரணமாக தான் இன்னும் ஆரம்ப தேதி அறிவிக்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பது பற்றிய நிகழ்ச்சி குழு தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், அனுமோகன், ரியோ ராஜ் ஆகிய கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.