நடிகை பூஜா ஹெக்டே அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ள பூஜா ஹெக்டே நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ ஆரம்பித்துள்ளார்.

வெளிநாட்டில் சிகிச்சையா!!! அதிர்ச்சி தகவல் குறித்து பூஜா ஹெக்டே மறுப்பு!.

தற்போது பல படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வரும் இவர் சினிமா துறையில் நடிகைகள் அழகாக தோற்றமளிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவற்றை வழக்கமாக செய்து வருவதைப் போல் தற்போது பூஜா ஹெக்டேவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டில் சிகிச்சையா!!! அதிர்ச்சி தகவல் குறித்து பூஜா ஹெக்டே மறுப்பு!.

அதாவது சினிமா வட்டாரத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் மூக்கை சமீபத்தில் பலரும் விமர்சித்து வந்துள்ளனர். இதனால் அவர் தனது மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை பெறுவதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் பூஜா ஹெக்டேவின் தரப்பிலிருந்து இந்த தகவலை மறுத்துள்ளனர். மேலும் அவருக்கு உடல்நல பிரச்சனை ஏதுமில்லை என்றும் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.