துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் பிரபல முன்னணி நடிகர் தான் தல அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

18 மாதங்களுக்கு நோ சூட்டிங்!!… அஜித்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!.

அதாவது, நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த 18 மாதங்களுக்கு தன்னுடைய பைக் ரைடில் கவனம் செலுத்த போவதாகவும் அதனால் அடுத்ததாக எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கம் இருக்கும் விக்னேஷ் சிவனின் ‘AK62’ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.