பிக் பாஸ் சீசன் 6 புதிய காதல் ஜோடி உருவாகி வருவதாக கூறி வருகின்றனர்.

Shivin About Bigg Boss 6 Crush : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய செரீனா கதிர் மீது கிரஷ் இருப்பதாக தெரிவித்திருந்தார். இருவரும் காதலிப்பதாக கூட சொல்லப்பட்டது. பிறகு ஷெரீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தீபாவளி கொண்டாட்ட சமயத்தில் மகேஸ்வரி கதிர் மீது தனக்கும் கிரஷ் இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் இவர்கள் இருவரையும் தொடர்ந்து திருநங்கை போட்டியாளரான ஷிவின் பிக் பாஸ் வீட்டில் தனக்கு கதிர் மீதுதான் கிரஷ் என தெரிவித்துள்ளார். இதனால் ஷிவின் கதிர் மீது காதல் வயப்படுவதாக கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.