Shiva's favorite Nagalinga flower | Health Tips | Beauty Tips | Young leaves of nagaling are used as medicines for skin diseases.

Shiva’s favorite Nagalinga flower :

விஷக் காய்ச்சலை குணமாக்கும் அதிசயம் நிறைந்த பூ, எது தெரியுமா? நாகலிங்க பூவின், மருத்துவ குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!..

நாகலிங்கத்தின் மருத்துவ குணம்:

நாகலிங்கம் என்பது மருத்துவ குணங்கள் நிரம்பிய மூலிகைகளில் ஒன்றாகும். மருத்துவ குணங்களுடன் அபூர்வமாகவும் கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம். நாகலிங்க பூ, மரம், இலை ஆகியவை மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.

கோவைக்காயில் இவ்வளவு நன்மைகளா? தெரியுமா உங்களுக்கு?

☆ மருத்துவ குணம்:

1) நாகலிங்க மரத்தின் இலைகளை மைய அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமாகும்.

2) நாகலிங்க மரத்தின் பட்டையும் காயும் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

3) நாகலிங்கத்தின் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

4) இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here