ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்துள்ளார் ஷிவானி நாராயணன்.
சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.