Shivani Narayanan Photo After BB

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Shivani Narayanan Photo After BB : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸும் இடம்பெற்றனர்.

பிக்பாஸில் கலந்துகொண்டு 18 போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் பிக்பாஸில் இருந்து 80 நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் தனது இன்ஸ்டாகிராமில் உள்ள கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் இவ்வளவு பெரிய மாற்றமா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார் ஷிவானி நாராயணன். சிவப்பு நிற ஆடையில் எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.