விக்ரம் படத்தை தொடர்ந்து ஷிவானி நாராயணன் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Shivani Narayanan in Ponram Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

அது மட்டுமல்லாமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்க ஷிவானி நாராயணன் போலீசாக நடிக்கிறார்.

தற்போது போலீஸ் கெட்டப்பில் பொன்ராம் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CYlRbInLBYI/?utm_medium=copy_link
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.